குமரன்குன்று கோயிலில் வைகாசி விசாக விழா
அன்னூர்: குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து கிரிவலம் வந்தனர். கல்யாண சுப்பிரமணியசாமிக்கு அலங்கார பூஜை நடந்தது. ஓரைக்கால்பாளையத்திலிருந்து காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்த 120 பக்தர்கள் கோவில் வளாகத்தில் காவடிகளை சமர்ப்பித்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில், ஓரைக்கால் பாளையம் ஸ்ரீ கிருஷ்ண லீலா குழுவின் பஜனை நடந்தது. முருகப்பெருமான் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement