பணி ஓய்வுபெற்ற துாய்மை பணியாளர் கவுரவிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சி பணியிலிருந்து ஓய்வுபெற்ற துாய்மைப் பணியாளரை, நகராட்சி நிர்வாகத்தினர் கவுரவித்தனர். மாமல்லபுரம், வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 60. மாமல்லபுரம் நகரியமாக இருந்தபோது, துாய்மைப் பணியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது நகராட்சி நிர்வாகத்திலும் பணியாற்றி, 30 ஆண்டுகள் கடந்து, நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இதையடுத்து, நகராட்சி பொறுப்பு கமிஷனர் சுரேந்திரன், திருப்போரூர் சுகாதார அலுவலர் ரகுபதி, நகராட்சி ஊழியர்கள், அவருக்கு சந்தனமாலை, சால்வை அணிவித்து, அவரது சேவையை பாராட்டி வாழ்த்தினர். கமிஷனர், தன் வாகனத்தில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து கவுரவித்தார்.

Advertisement