காஞ்சி கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நேற்று தொடங்கியது.

சின்ன காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், கங்கையம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோடை உத்சவம் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் நேற்று தொடங்கியது.

இதில், நேற்று, இரவு 8:00 மணிக்கு ஜலம் திரட்டுதலும், இரவு 12:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.

இன்று மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்படுகிறது.

நாளை மதியம் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது.

Advertisement