சொற்பொழிவு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் படிப்பிடை பயிற்சி மாணவர்களுக்காக ‘எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல்’ எனும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

மாணவர் இளஞ்செழியன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பேராசிரியர் முருகேசன் பேசுகையில் ‘‘மாணவர்கள் நேர்மறை எண்ணங்களோடு இருக்க வேண்டும் என்றால் காந்திய சிந்தனை படிக்க வேண்டும்’’ என்றார்.

ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசுகையில் ‘‘ஒருவனுடைய சாதனைக்கு இடையூறாக இருப்பது எதிர்மறை எண்ணங்களே. நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்க முடியும்’’ என்றார். இக்னோ பல்கலை உதவி பதிவாளர் (பணி ஓய்வு) முத்தானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி ஷிபா கிரேஸ் நன்றி கூறினார்.

Advertisement