இரவு முழுவதும் மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பூவாணிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் சிரமத்தை சந்தித்தனர். அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இரவில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால் நேற்று பகலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று மின்விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement