சாலை விபத்தில் கல்லுாரி மாணவன் பலி

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவன் உயிரிழந்தார்.

வெங்கல் அடுத்த எர்ணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் மகன் ஹேமந்த், 18. தனியார் கல்லாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம், ‘யமஹா’ இருசக்கர வாகனத்தில், கவரைப்பேட்டை மேம்பாலம் அருகே சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த, அடையாளம் தெரியாத வாகனம், மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தருமாறி விழுந்த ஹேமந்த், படுகாயம் அடைந்தார். பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே ஹேமந்த் உயிரிழந்தார்.

Advertisement