ஹவாலா பணம் வாலிபர் கைது

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு அருகே, ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வந்த, 19.6 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், மஹாராஷ்டிரா வாலிபரை கைது செய்தனர்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், சொரனுார் டி.எஸ்.பி., சாஜு ஆப்ரகாம் உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார், நேற்று சொரனுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனையிட்டனர். சந்தேகத்தின்படி ஒரு வாலிபரிடம் நடத்திய சோதனையில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல், 19.6 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ், 27, என்பதும், ரயிலில் சொரனுாருக்கு பணம் கொண்டு வந்ததும், பஸ்சில் திருச்சூருக்கு கடத்த முயன்ற போது சிக்கியதும் தெரிய வந்தது. கைதான அவரை, வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement