ரூ.20,000 ஒயர்கள் திருடிய 2 பேர் கைது
எம்.ஜி.ஆர்.: ஜாபர்கான்பேட்டை, திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் அகமது ஜலீல், 36; கே.கே., நகர் பாரதிதாசன் தெருவில், பழைய மரச்சாமான்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். தன் வீட்டின் அருகே அதற்கான கிடங்கும் வைத்துள்ளார்.
இந்த கிடங்கில், 4 கிலோ பித்தளை ஒயர், 23 கிலோ அலுமினிய ஒயர்களை, தனித்தனியாக இரண்டு சாக்கு பைகளில் வைத்திருந்தார்.
மொத்தம் 20,000 ரூபாய் மதிப்புள்ள ஒயர்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக, எம்.ஜி.ஆர்., நகர் போலீசில், இம்மாதம் 28ல் அகமது ஜலீஸ் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, மேற்கு மாம்பலம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த முகிலன், 21, எம்.ஜி.ஆர்., நகர் லோகேஷ்வரன், 21, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்த ஒயர்களையும் மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement