மனைவி கொடுமையால் கருணைக்கொலை செய்ய மாவட்ட கலெக்டரிடம் கணவர் கோரிக்கை; குஜராத்தில் அதிர்ச்சி
நமது நிருபர்
குஜராத்தில், தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் கிரித் படேல். துணி வியாபாரியான இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த மனிஷா சவுகான் என்பவரை நான்காவதாக திருமணம் செய்தார். அவரது மனைவி, சிறிய விஷயங்களுக்குக் கூட சந்தேகம் அடைந்து சண்டையிட்டு வந்துள்ளார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், இதே நிலை நீடித்ததால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
இந்நிலையில் சூரத் மாவட்ட கலெக்டரிடம், கிரித் படேல் சமீபத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில் 'மனைவி, மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.
குடும்பத்தை காப்பாற்ற எண்ணி, இந்தக் கொடுமைகளை பல ஆண்டுகள் சகித்து கொண்டு வாழ்ந்து வந்தேன். தற்போது எல்லை மீறியதால், வேறு வழியின்றி உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே, கருணை கொலை தொடர்பான என் மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபரீத முடிவு எடுக்க நேரிடும்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில், 'என் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, நான்காவது மனைவி மனிஷா சவுகான் கொலை செய்ய திட்டமிட்டார். இதுதொடர்பாக, போலீசில் புகார் அளித்தும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஒரு ஆண் என்பதால் என் மனுவை பரிசீலிக்கவில்லை' என, தெரிவித்துள்ளார்.
மேலும்
-
அவசர மருத்துவ உதவி அழைப்பு சேவையில் கடலுார் மாவட்டம்... முதலிடம்:ஏப்ரல் மாதத்தில், 8,117 பேருக்கு உதவி அசத்தல்
-
அமைச்சர்களை நியமிக்காவிட்டால் போராட்டம்: த.வெ.க., எம்.எல்.ஏ., அறிவிப்பு
-
உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
-
பவுர்ணமி பூஜை
-
கம்பத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
-
வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை திருட்டு