மனு பாகர் ஜோடி 'வெள்ளி': 'உலக' துப்பாக்கி சுடுதலில்
முனிக்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சாம்ராட் ராணா ஜோடி வெள்ளி வென்றது.
ஜெர்மனியின் முனிக் நகரில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடந்தது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பாகர், சாம்ராட் ராணா ஜோடி, 582.21 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், ஷர்வன் குமார் ஜோடி, 575.20 புள்ளிகளுடன் 10வது இடம் பிடித்து ஏமாற்றியது.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய மனு பாகர், சாம்ராட் ராணா ஜோடி, 483.6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. சீன ஜோடி (483.9 புள்ளி) தங்கத்தை தட்டிச் சென்றது.
இத்தொடரில் 2 தங்கம், 2 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. சீனா (4 தங்கம், 3 வெண்கலம்) முதலிடத்தை கைப்பற்றியது.
மேலும்
-
4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை செய்தவர் இப்போது அமைச்சர்!
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு