பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக விழா
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் 104ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா மே 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையோட்டி பக்தர்கள் நேற்று காலை 4:00 மணி முதல் பால்குடம் எடுத்தும், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே மவுனகுருசாமி மடத்தில் அலகு குத்தி, வீரப்பன் திடலில் பூக்குழி இறங்கினர். பின் 3 கி.மீ., பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்று சுவாமிக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்தனர். இன்றிரவு 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட பட்டுப்பல்லாக்கில் எழுந்துருளி நகர்வலம், ஜூன்1 மாலை 6:00 மணிக்கு சீர்பாதம் தாங்கிகளுக்கு பாத்தியப்பட்ட ஈசநாட்டு கள்ளர் திருக்கண்ணில் இருந்து புறப்படாகி ராமலிங்கம் சேர்வை ஜோடனை மண்டபத்தில் அலங்காரம் நடக்கும். இரவு 11:59 மணிக்கு மேல் மின்னலங்கார பூ பல்லக்கில் சுவாமி முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.
மேலும்
-
தகிக்கும் வெயிலில் முன் அறிவிப்பற்ற மின்தடை சாகுபடி பணிகள் பாதிக்கும் அபாயம்
-
டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
-
தொடரும் காலநிலை மாற்றத்தால் கேரட், பீன்ஸ் விலை குறைந்தது
-
தொடரும் மழையால் இலை வரத்து அதிகம் போதிய விலை இல்லாததால் அதிருப்தி
-
ஜெயேந்திர பள்ளி மாணவி தேசிய அளவில் சாதனை
-
குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது