குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
புதுச்சேரி: புதுச்சேரி புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் சார்பில், வீடற்ற எஸ்.சி., புதிரை வண்ணார் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வலியுறுத்தி குடிசை மாற்று வாரிய அலுவலகம் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்தில் இயக்கத் தலைவர் தெய்வநீதி தலைமையில் நிர்வாகிகள் அர்ஜுனன், கோவிந்தன், அழகுவேல், சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், ராஜசேகர், சக்திவேல், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் குடிசை மாற்று வாரியம் தொடர்ந்து புதிரை வண்ணார் சமூகத்தின் கோரிக்கைகளைப் புறக்கணித்து வருவதாகவும், வீடற்ற எஸ்.சி., புதிரை வண்ணார் சமூக மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து, குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் உட்பட 30 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்