தொடரும் காலநிலை மாற்றத்தால் கேரட், பீன்ஸ் விலை குறைந்தது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட், பீன்ஸ் விலை குறைந்து விற்பனை ஆனது.
மேட்டுப்பாளையம் --– அன்னுார் சாலையில், மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. கேரட், பீன்ஸ் உட்பட மலைக்காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மாவட்ட விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். காலநிலை மாற்றத்தால், கேரட், பீன்ஸ் விலை குறைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட், காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-
ஒரே நாளில் மழை, வெயில் என காலநிலை நிலவுவதால், ஊட்டி கேரட், பீன்ஸ் காய்கறிகள் அழுகும் நிலை உருவாகிறது. தற்போது அறுவடை செய்யும் கேரட்களில் வெடிப்பும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிகளவில் இவைகளை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.
இன்று (நேற்று) ஒரு கிலோ கேரட் ரூ.45 முதல் ரூ.55 வரையிலும், பீன்ஸ் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை ஆனது. இதற்கு முன், 20 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அவர் கூறினார்.---
மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்