டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேத விற்பன்னர்கள், மேளம், நாதஸ்வர குழுவினர் என 10க்கும் மேற்பட்டோர் முருகன் மற்றும் விநாயகர் சிலைகளுடன் வேனில் சென்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராயபாளையம் அருகே சென்றபோது திடீரென வேன் டயர் வெடித்தது. இதில் தடுமாறிய வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் கொண்டு சென்ற சுவாமி சிலைகளும் சேதமடைந்தன.

திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் வீரர்கள், நெடுஞ்சாலை மீட்பு பிரிவினர் காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப் பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

Advertisement