ஜெயேந்திர பள்ளி மாணவி தேசிய அளவில் சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் ஜெயந்திர சரஸ்வதி பள்ளி மாணவி சொப்னா, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

இப்பள்ளியில் பிளஸ்2 பயின்று வரும் மாணவி சொப்னா. கடந்த 2023-24ம் ஆண்டு நடைபெற்ற கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றார். விழுப்புரம் மண்டல, மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து 2024-25ம் ஆண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தார். கடந்த 2025-26ம் ஆண்டு போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

 கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், மாணவி சொப்னா பங்கேற்று வருகிறார். இதேபோல்,  தடகள விளையாட்டிலும் தனி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

பள்ளியின்  விளையாட்டுத்துறை தலைவியாக உள்ள மாணவி சொப்னாவிற்கு, பள்ளியின் தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement