தென் மாநில தேயிலை ஏலம் ரூ. 17.15 கோடி வருவாய்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏலம் மையத்தில் நடந்த 22வது ஏலத்தில் 17.16 லட்சம் கிலோ வந்ததில், 16.32 லட்சம் கிலோ விற்ற நிலையில், 17.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
டீசர்வ் ஏலத்தில் 1.12 லட்சம் கிலோ வந்ததில் 99,16 கிலோ விற்றது. (88.45 சதவீதம்). 99.23 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
கோவையில், 5.15 லட்சம் கிலோ வந்ததில், 4.43 லட்சம் கிலோ விற்றது (86.04 சதவீதம்). 5.70 கோடி ரூபாய் வருவாய் இருந்தது.
கொச்சியில், 10.49 லட்சம் கிலோ வந்ததில் 8.49 லட்சம் கிலோ விற்பனை (80.92 சதவீதம்). 13.51 கோடி ரூபாய் வருவாய் இருந்தது.
தென் மாநில அளவில் நடந்த 22-வது ஏலத்தில், மொத்தம் 33.92 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 30.23 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. 37.38 கோடி ரூபாய் மொத்த வருவாய் இருந்தது.
21வது ஏலத்தில் 34.62 லட்சம் கிலோ தேயிலை வரத்து இருந்த நிலையில் 29.75 லட்சம் கிலோ விற்றது. 36.13 கோடி ரூபாய் மொத்த வருவாய் இருந்தது.
கடந்த வாரத்தை விட, 70 ஆயிரம் கிலோ வரத்து குறைந்த போதும், 48 ஆயிரம் கிலோ அதிகமாக விற்பனையானது. மொத்த வருவாய், 1.25 கோடி ரூபாய் அதிகரித்தது.
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை