4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை செய்தவர் இப்போது அமைச்சர்!
நமது சிறப்பு நிருபர்
மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி, இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் களம் இறங்கி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியாளரை 12,535 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் போட்டியிட்ட ஆஸ்கிராம் சட்டசபை தொகுதி மக்கள் மத்தியில் கலிதா மாஜிக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு.
2006ல் பிளம்பர் வேலை செய்து வந்த ஒரு பிளம்பரை கலிதா மாஜி திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக குஸ்காரா பகுதியில் வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்து, சுத்தம் செய்தல், சமையல் மற்றும் பராமரிப்புப் பணிகளை செய்து வந்தார். அவர் மாதத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். பிரதமர் மோடியே தனது அரசியல் பயணத்துக்கு உத்வேகமாக இருந்ததாக கலிதா மாஜி தெரிவித்து இருக்கிறார். அமைச்சராகப் பதவியேற்ற மகிழ்ச்சியில் பாஜ எம்எல்ஏ கலிதா மாஜி கூறியதாவது:
வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்தபோதிலும், எனது பணிகளை செய்து கொண்டே அனைத்து பாஜ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன். நான் எனது தொகுதி மக்களை பற்றி மட்டுமே சிந்தித்து வந்தேன். பின்தங்கிய மக்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது, சுகாதார மையமும் இல்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக எனது முதல் பணி, ஒரு மருத்துவமனையாகக் கட்டுவது தான்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன். எனது தொகுதியில் வசிக்கும் மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கு காடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு வீட்டுப் பணியாளரும் அரசியல்வாதியாக ஆக முடியும் என்று கூறினேன். தற்போது அது நிறைவேறி உள்ளது. பாஜவால் பெண்களையும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரையும் மேம்படுத்த முடியும்.
என்னைப்போன்ற ஏழை மக்களுக்காக நான் பணியாற்ற விரும்புகிறேன். ஊழலற்ற ஆட்சி மற்றும் ஏழைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன், என்றார். வீட்டு வேலை செய்து மாநில அமைச்சராகப் பதவியேற்ற நிலையில் கலிதா மாஜியின் பயணம், மேற்கு வங்க அரசியல் களத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
வாசகர் கருத்து (49)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03 ஜூன்,2026 - 01:13 Report Abuse
எங்குமே எந்த நாட்டிலும் நடக்காத சாத்தியம்தான் மேற்கு வங்கத்தில் பாஜப காட்டியுள்ளது இதை மற்ற எல்லா அரசியல்வாதி வாரிசு அரசுகளும் எல்லா மாநிலங்களிலுமப் பின்பற்றவேண்டும் அதுதான் அரசியல் வாரிசு அரசியல் முழுக்க ஒழிய வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் l 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
02 ஜூன்,2026 - 19:03 Report Abuse
அமிட்ஷா அவர்களின் நாடகம், தமிழ் நாட்டில் நோட்டாவுக்கும் கீழே தான் உள்ளது 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
02 ஜூன்,2026 - 17:31 Report Abuse
மந்திரியாவதற்கு தகுதி நல்ல மூளைமட்டுமே போதுமே .நேர்மையாக சிந்திக்கும் திறன் ,களவாடாமை ,மக்களுடன் அன்பனாக இருத்தல் போதுமே . 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
02 ஜூன்,2026 - 17:04 Report Abuse
ஒரு பக்கம் பார்த்தால் மிக நல்லதாகத்தெரிகின்றது இன்னொரு பக்கம் பார்த்தால் அசிங்க அசிங்கமாகத்தெரிகின்றது.
1 உடனே எம் எல் ஏ ஆகவில்லை. அரசியலில் 10 வருடத்திற்கு மேலாக நின்று பதவிகளும் பிஜேபியில் வகுத்து ஒரு தடவை தேர்தலில் 2 ஆவதாக வந்து இப்போது வெற்றி பெற்றிருப்பது ஓகே
2 வீட்டு வேலைசெய்யும் படிப்பறிவில்லாத ஒருவரை எப்படி தேர்தலில் நிற்கவைக்க முடிகின்றது. அப்படியென்றால் தேர்தலில் நிற்க தகுதிகள் என்று ஒன்றுமேயில்லையா??? ஒரு என்ஜினீயர் டாக்டர் வக்கீல் .......ஆக குறைந்தது படிப்பு இவ்வளவு இருக்கவேண்டும் என்று இருக்கும்போது ஒரு எம் எல் ஏ ஆக ஒரு தகுதியும் தேவையில்லையா??? வெறும் வயது இருந்தால் மட்டும் போதுமா, அது மட்டும் தான் தகுதியா??? ?ஒரு எம் எல் ஏ என்பது அந்த பகுதியின் தலைவர்???அமைச்சர் என்பது அந்த மினிஸ்டரியின் தலைவர். ஒரு எம் எல் ஏ பதவி குறைந்தது 3 லட்சம் மக்களின் வாழ்க்கை பாதை சீரமைத்தல்?? ஒரு மந்திரி பதவி என்பது குறைந்தது 6 கோடி மக்களின் வாழ்க்கையை சீரமைத்தலில் உள்ளது???ஒரு பெரிய டிபார்ட்மென்ட் இருக்கும் ஐஏஎஸ் ஆஃபீசர் துணையிருக்கும்???இவர்கள் அமைச்சரை பார்க்கும் போது இந்த தற்குறி சொல்லி நாம் கேட்கவேண்டுமா இந்த வேலைகளை என்று தோன்றாதா என்ன??? 0
0
BHARATH - TRICHY,இந்தியா
02 ஜூன்,2026 - 17:47Report Abuse
நீங்க நினைக்கிறது தப்பு அந்த பெண் 2006ல் வீட்டு பனி செய்து இருக்கிறார்கள். 0
0
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02 ஜூன்,2026 - 18:40Report Abuse
தகுதி என்று ஒன்று இருந்தால் தமிழகத்தின் தலைசிறந்த காமராஜர் முதல்வராகி இருக்க முடியாது. 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
02 ஜூன்,2026 - 19:22Report Abuse
அருள் நாராயணன் க்கு அப்ளாஸ். திருட்டு தீய முக முந்திரி ங்க என்ன படிச்சிருந்தானுங்க? அப்பறம் கட்டு மரம் கருணா என்னா படிச்சிருந்திச்சி? ரௌடிகள் கூட்டம் சகிதமாக மஞ்ச துண்டு போட்டுகிட்டு ஆட்சியில் இருந்திச்சே. அது என்னாவாம்? 0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02 ஜூன்,2026 - 15:27 Report Abuse
அதிக அறிவு உள்ளவராக தெரிகிறார். இவருக்கு பெங்காலி ஹிந்தி மற்றும் ஆங்கிலம்கூட தெரியுமாம். 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
02 ஜூன்,2026 - 14:47 Report Abuse
Congratulations. Is this not real social justice? Social justice in letter and spirit. The political parties claiming to be saviours of Social Justice should learn from this. People who vote for such so called saviours of social justice should also think twice before exercising their democratic rights 0
0
Reply
Subramanian - ,
02 ஜூன்,2026 - 14:41 Report Abuse
வாழ்த்துகள் 0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
02 ஜூன்,2026 - 14:18 Report Abuse
பிரகாஷ்ராஜ் போன்ற பொறாமைக்காரர்கள், இப்போது இதை " சோ த்துக்கு லாட்டரி அடித்து வீட்டு வேலை செய்தவங்க இப்போ அமைச்சர்" என்று வசை பாடுவார்கள். முட்டு கொடுக்க சில வெறியர்கள் வருவார்கள். 0
0
Reply
kulanthai kannan - ,
02 ஜூன்,2026 - 13:10 Report Abuse
ஒரு அமைச்சர் எளிமையாக, நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. தொலைநோக்கு சிந்தனையும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வரும் இருக்க வேண்டும். மனித வாழ்வை மேம்படுத்தியவர்கள், மின்சாரம், தொலைபேசி, கம்ப்யூட்டர், சைக்கிள், கார், ரயில், இரும்பு, சிமெண்ட் கண்டுபிடித்தவர்களின் அறிவுதான் முக்கியம். அவர்கள் ஏழையா, எளிமையானவரா என்பதல்ல. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 ஜூன்,2026 - 12:52 Report Abuse
இது என்ன பெரிய அதிசயம்? அன்றைக்கு எங்க தலைவர், கையில ஒரு பைசா காசு இல்லாம, ட்ரைன்ல டிக்கெட் எடுக்காம, டாய்லெட்டில் பதுங்கி சென்னை வந்து, பிறகு பல பல தில்லுமுல்லுகளை செய்து, மாநிலத்துக்கே முதல்வர் ஆனார். பிறகு அவர்கள் குடும்பமே தமிழகத்தை சுரண்டியது. அதையெல்லாம் விட இது அதிசயமா...? 0
0
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02 ஜூன்,2026 - 18:42Report Abuse
நல்லது பற்றி பேசும் போது அபசகுணம் வேண்டாம். 0
0
Reply
மேலும் 35 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement