ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்; அதிபர் டிரம்ப் உறுதி
வாஷிங்டன்: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நியூஸ் சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டி: எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அணு ஆயுதங்களுக்கு உத்திரவாதம் இடம்பெற வேண்டும். ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். நாம் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான இறுதி கட்டத்தில் இருக்கிறோம். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட விட்டால் ராணுவ நடவடிக்கைகள் மூலம் நாம் அதை முடித்து விடுவோம்.
ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். வென்சிலா உள்ளிட்ட இடங்களில் கடந்த கால ராணுவ நடவடிக்கைகள் ஒப்பந்தம் மேற்கொள்ளாததால் பதற்றங்களை அதிகரிக்க செய்தது. நாம் ஏற்கனவே ஈரான் ராணுவத்தை தோற்கடித்து விட்டோம். ஒப்பந்தம் கையெழுத்திட்ட உடனே ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை திறக்க வேண்டும்.
என்னிடம் உள்ள ஒரே உத்தரவாதம், அணு ஆயுதங்கள் இருக்காது என்பதுதான். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நீங்கள் அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாது. அமெரிக்கா விரும்புவதை மெதுவாக கிடைத்துவருகிறது. பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை என்றால், மற்ற மாற்று வழிகளைக் கையாள அமெரிக்கா தயங்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
ஈரான் பாகிஸ்தான் நாடுகளுடன் செய்யும்
அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் தண்ணீரில் எழுதும் ஒப்பந்தத்திற்கு சமம். நூறுக்கு மேற்பட்ட குழுக்கள் உருவாகும்.
பல குழுக்கள் ஒப்பந்தத்தை ஏற்காது. ? ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அணு ஆயுதம் மூலம் உலகிற்கு எந்த நிமிடமும் ஆபத்து வரலாம். தீவிரவாதிகள் முதல் சுற்று இலக்கு அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா,?
இவர்களின் அணு ஆயுத தயாரிப்பை அழிக்க வேண்டியது உலகின் கடமை. பாம்புக்கு பால் வார்க்கும் சீனா மரண தைரியத்தில் உள்ளது.
கையெழுத்து போட்டுவிட்டு பேட்டி கொடுத்தால் கோடிகளை இழந்த பங்குசந்தை முதலீட்டாளர்கள்
சந்தோஷம் அடைவார்கள் ..
இப்படி சண்டை காட்டுவது போல
சொல்றது நல்லா இல்ல
பாவம் தாத்தா ஏன்
போருக்கு போனோம் எப்படி
போரை நிறுத்துவது என்று தெரியாமல்
திணறி கொண்டு இருக்கார்
இந்த பைத்தியக்காரன் புலம்பலை தவிர்ப்பதே நமக்கு நல்லது. எப்ப பார்த்தாலும் முன்னுக்கு பின் முரண்.