வானில் தோன்றும் நீல நிலா; இன்று இரவு காணத்தவறாதீர்கள்!
சென்னை: வானில் இன்று (மே 31) இரவு தோன்றும் நீல நிலாவை காணத்தவறாதீர்கள். இந்த அரிய நிகழ்வு குறித்து ஓர் சிறப்பு அலசல்!
ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி (முழு நிலவு) தோன்றினால், இரண்டாவது பவுர்ணமி நிலவு "நீல நிலா" (Blue Moon) என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில், பூமிக்கு மிகத் தொலைவில் நிலா இருக்கும்போது தோன்றும் 'நீல நிலா', அளவில் வழக்கமான நிலாவை விடச் சிறியதாகத் தோன்றலாம். இது 'மைக்ரோமூன்' (Micromoon) என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான மாதங்களில் ஒரே ஒரு பவுர்ணமி மட்டுமே இருப்பதால், நீல நிலவுகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கின்றன. இதுவே அரிதாக நிகழும் நிகழ்வு. இந்த அதிசய நிகழ்வை தங்களது கண்களால் கண்டு ரசிக்க உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களும், பொதுமக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மைக்ரோமூன்கள் ஒரு வருடத்தில் பலமுறை நிகழ்ந்தாலும், அவை நீல நிலவுடன் ஒரே நேரத்தில் நிகழ்வது அசாதாரணமானது என்று வானியலாளர்கள் கருதுகின்றனர். நிலவானது பூமியை வலம் வரும் தனது நீள்வட்டப் பாதையில், பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள புள்ளியை எட்டும்போது இந்த பவுர்ணமி நிகழ்கிறது. பூமியிலிருந்து 4 லட்சத்து 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நிலவு தள்ளிச்செல்வதால், இது வழக்கத்தை விட சற்றே சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றக்கூடும்.
''சூரியன் மறைந்த பிறகு நிலவு கிழக்கு வானில் தோன்றும். அது சிறியதாகவும் மங்கலாகவும் தெரிந்தாலும், பெரும்பாலான மக்கள் அந்த வித்தியாசத்தைக் கவனிக்க மாட்டார்கள். இதே போன்ற ஒரு நீல நிற சிறுநிலவு மீண்டும் தோன்றுவதற்கு பத்தாண்டுகள் ஆகலாம். சூரியன் மறைந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, மொட்டை மாடிகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் ஏரிக்கரைகளில் இருந்து நிலவைக் காணலாம்.
தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்'' என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். முன்னதைாக கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புளு மூன் நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
once in a blue moon
மிக்க நன்றி. பள்ளி மாணவர்கள் இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது, விண்வெளி குறித்து மேலும் ஆர்வம் கொள்வார்கள்.
அன்று வந்த அதே நிலாதான்! அடுத்த மாதமும் அதேதான் வரும்!
அதற்கு என்ன பார்த்துவிடலாம்.....
தகவலுக்கு நன்றி. எத்தனை பேர் இந்த செய்தியை படிப்பார்களோ.மேலும்
-
அவசர மருத்துவ உதவி அழைப்பு சேவையில் கடலுார் மாவட்டம்... முதலிடம்:ஏப்ரல் மாதத்தில், 8,117 பேருக்கு உதவி அசத்தல்
-
அமைச்சர்களை நியமிக்காவிட்டால் போராட்டம்: த.வெ.க., எம்.எல்.ஏ., அறிவிப்பு
-
உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
-
பவுர்ணமி பூஜை
-
கம்பத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
-
வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை திருட்டு