மணல் குவாரி திறக்க கோரிக்கை
சேலம்:சேலம்
மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் நலச்சங்க செயற்குழு
கூட்டம், குரங்குச்சாவடியில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
இதுகுறித்து மாவட்ட செயலர் கண்ணையன்
கூறியதாவது: கடந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பொழிந்ததால்,
காவிரி ஆற்றில் அதிகளவில் மணல் தேங்கியுள்ளது. மணல் லாரி
உரிமையாளர்கள், தொழிலாளர்கள், கட்டுமான தொழில் செய்பவர்கள்,
செங்கல் வேலை செய்பவர்கள் என லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம்
கருதி, அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம்
மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர், செங்கல் சூளை உரிமையாளர்,
கட்டுமான தொழில் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்க, நொரம்பு மண், செம்மண், கிராவல் மண், கருங்கற்களை வெட்டி
எடுக்க அரசு பர்மிட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, செயற்
குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.