பால்குட உற்சவம்

திருப்புவனம்;திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவியம்மன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குட உற்சவம் மே 31 நடந்தது.

நேற்று காலை ஏழு மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக வைகை ஆற்றிற்கு மேளதாளங்களுடன் சென்று பால்குடம் எடுத்து மாரியம்மன் கோயிலுக்கு திரும்பி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால்குட உற்சவத்தில் பங்கேற்றனர். இரவு திருவிளக்கு பூஜை நடந்தது.

Advertisement