திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட்ட திருமாவளவன்!

16

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட்ட திருமாவளவன்!

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாமி கும்பிட்டார்.

பாதுகாப்புத்துறை தொடர்பான பார்லி. நிலைக்குழுவினர் திருப்பதி வந்தனர். அவர்கள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் இடம்பெற்று உள்ளார்.

அவரும், நிலைக்குழுவினருடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது;

பாதுகாப்புத்துறையின் பார்லி. நிலைக்குழு கடந்த 22ம் தேதியில் இருந்து ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது. ஜம்முகாஷ்மீரில் ஆரம்பித்து, பெங்களூரு, கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை ஆகிய இடங்களில் பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்றோம்.

நிறைவாக, 10 எம்பிக்கள், ராஜ்ய சபா எம்பி ஜெகதீஷ் ஷட்டர் தலைமையில் திருப்பதி தேவஸ்தானம் வந்தோம். தேவஸ்தானம் மிக சிறந்த முறையில் எங்களை வரவேற்றனர். சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த பயணம் மகிழ்ச்சியாக அமைந்தது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement