தபால் ஊழியர் ஆறு பேர் ஓய்வு

கோவை: ஆர்.எஸ்.புரம் தபால் நிலைய உதவி அலுவலர் கோபிநாத், பாப்பநாயக்கன்பாளையம் பன்முக பணியாளர் ராதாகிருஷ்ணன், தலைமை அஞ்சலக பன்முக பணியாளர் சந்திரன், மத்திய அஞ்சலக தபால்காரர் ரபீக் அகமது, சவுரிபாளையம் தபால்காரர் வெங்கட்ராமன் ஆகியோர் பணி நிறைவு பெற்றனர். ஓய்வு பெற்ற வெள்ளலுார் தபால் நிலைய தபால்காரர் செல்வராஜுக்கு பிரிவுபசார விழா நடந்தது. தபால் நிலைய அதிகாரி தண்டாயுதபாணி, முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றவர்களை வாழ்த்தினர்.

Advertisement