21 கி.மீ., துாரம் 'ஸ்கேட்டிங்' சென்று அசத்திய சிறுவர்கள்
திருப்போரூர்: கோவளம் அருகே இ.சி.ஆர்., சாலையில், 15 வயதுக்கு உட்பட்ட 12 சிறுவர்கள் ஒன்றாக இணைந்து, 21 கிலோ மீட்டர் துாரம் 'ஸ்கேட்டிங்' சென்று அசத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அருகே இ.சி.ஆர்., சாலையில், 'ஸ்கேட்போர்டிங்' தினத்தை முன்னிட்டு 'ஸ்கேட்டிங்' போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இப்போட்டி, 3, 5, 7, 15, 21 கிலோ மீட்டர் துாரம் என ஐந்து பிரிவுகளில் நடந்தது; 5 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கேற்றனர்.
இதில், 12 சிறுவர்கள் ஒன்றாக இணைந்து, 21 கிலோ மீட்டர் துாரம் 'ஸ்கேட்டிங்' சென்று அசத்தினர். இதை உலக சாதனையாக 'ராபா புக் ஆப்' உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்தது.
போட்டி நிறைவில், திருப்போரூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., விஜயராஜ் பங்கேற்று, 12 சிறுவர்களுக்கு சால்வை அணிவித்து, உலக சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை