கட்சி தாவலை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

சித்தாமூர்: முதுகரை பகுதியில் மதுராந்தகம் முன்னாள் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேலை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின் கடந்த மாதம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதியில் த.வெ.க., சார்பில் மரகதம் குமரவேல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது செங்கல்பட்டு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் மரகதம் குமரவேலுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement