ரூ.2 கோடி நில மோசடி 4 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீனிவாசனிடம், நிலம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2 கோடி முன்பணம் பெற்று மோசடி செய்ததாக தந்தை, மகன் உட்பட 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்துாரைச் சேர்ந்த மனோகரனுக்கு சொந்தமான 15 ஏக்கர் 9 சென்ட் நிலம் திசையன்விளையில் உள்ளது. அந்த நிலத்தை ரூ.20.37 கோடிக்கு வாங்க சீனிவாசன் ஒப்பந்தம் செய்தார். இதற்காக 2024 ல் இரு தவணைகளில் ரூ.2 கோடி முன்பணம் வழங்கியிருந்தார்.
இதையடுத்து நிலத்தை மனைகளாகப் பிரிக்கும் பணிகளில் சீனிவாசன் ஈடுபட்டார். ஆனால் அந்த நிலத்தை மனோகரன் தனது மகன் சூரஜ் பெயருக்கு செட்டில்மென்ட் மூலம் மாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனோகரன், அவரது மகள்கள் மதனா, கீர்த்தி மற்றும் மகன் சூரஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும்
-
மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
-
போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு: நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
-
நாளை பள்ளிகள் திறப்பு துாய்மை பணி விறுவிறு
-
பயிர்க்கடன் முழு தள்ளுபடி காங்., விவசாயி அணி மனு
-
மஹா மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
-
ரூ.33.01 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்