போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு: நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
குளித்தலை:குளித்தலை நகராட்சி, சுங்ககேட், கரூர், திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும்; சேலம், நாமக்கல், முசிறி, பெரம்பலுார், துறையூர் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும்; மதுரை, திண்டுக்கல், தரகம்பட்டி, தோகைமலை மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டுமென்றால், சுங்கச்சாவடி ரவுண்டானாவை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குளித்தலை நகராட்சி சுங்கச்சாவடியில், குளித்தலை-
மணப்பாறை சாலை ரயில்வே கேட் உள்ளது. தினந்தோறும் பயணிகள் ரயில்கள், விரைவு ரயில், சரக்கு ரயில் செல்லும்போது, 'கேட்' மூடப்படும். அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அணி
வகுத்து நிற்கும் சூழல் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், குளித்தலை சுங்க
கேட் ரவுண்டானா சுற்றிலும் மற்றும் நான்கு சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் வாகனங்கள் சீராக செல்ல வழிவகுக்கும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையொட்டி, நேற்று காலை, 11:30 மணிக்கு, குளித்தலை போக்குவரத்து(பொ) டி.எஸ்.பி., வெங்கடாசலம் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், போக்கு
வரத்து இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், தங்கப்பாண்டியன், எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது, கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார்கள் எச்சரிக்கை விடுத்தனர்.