பயிர்க்கடன் முழு தள்ளுபடி காங்., விவசாயி அணி மனு
குளித்தலை:குளித்தலையில், காங்., விவசாயிகள் அணி சார்பில், பொதுச்செயலாளர் வலையப்பட்டி வெங்கடாசலம், சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் மகேந்திரனிடம், தமிழக அரசு முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கோரிக்கை அளித்தனர்.
அந்த மனுவில், தற்போதைய அரசான, த.வெ.க., கட்சி தலைமையில், இந்திய தேசிய காங்., கட்சியும் அங்கம் வகித்துள்ளது. த.வெ.க., தேர்தல் வாக்குறுதிப்படி, அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்., மாநில விவசாயி
கள் அணி பொதுச்செயலாளர் வெங்கடாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement