நாளை பள்ளிகள் திறப்பு துாய்மை பணி விறுவிறு

கரூர்:நாளை பள்ளி திறப்பால், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துாய்மை பணி விறுவிறுப்பாக நடந்தது.


தமிழகத்தில், கோடைவிடுமுறைக்கு பின் பள்-ளிகள், நாளை திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன், அனைத்து பள்ளிக-ளிலும் துாய்மைப்பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்
களிலும், 881 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் துாய்மை பணி நடந்து வருகிறது. இதில், வகுப்-பறை, பள்ளி வளாகம், சமையலறை உள்-ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்-களின் மேற்பார்வையில் பணியாளர்கள் மேற்-கொண்டுள்ளனர்.


பள்ளிகள் திறக்கப்படுவதை-யொட்டி, பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு புத்-தகப்பை, சீருடைகளை வாங்கி வருகின்றனர். இதனால், கரூரில் ஜவுளி மற்றும் புத்தக கடைகளில் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

Advertisement