ரூ.33.01 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம்
கரூர்:சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 23,083 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 30.29 ரூபாய், அதிகபட்சமாக, 38.92 ரூபாய், சராசரியாக, 37.49 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,088 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 2 லட்சத்து, 67 ஆயிரத்து, 513 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 125.88, அதிகபட்சமாக, 133.70,
சராசரியாக, 132.50, இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக, 101.69, அதிகபட்சமாக, 123.86 ரூபாய், சராசரி விலையாக, 120.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 24,348 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 30 லட்சத்து, 33 ஆயிரத்து, 904 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 33 லட்சத்து, 1,417 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.