இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி: புதிய முப்படை தலைமை தளபதி

8


புதுடில்லி: இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளோம் என தலைமை தளபதியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு ராஜா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


முப்படை தலைமை தளபதியாக இருந்த அனில் சவுஹான் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமைத்தளபதியாக என்எஸ் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்னதாக, அவர் தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதன் பிறகு, தெற்கு பிளாக்கில் அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.

Tamil News
Tamil News
Tamil News
Latest Tamil News
இதனை ஏற்றுக் கொண்ட பிறகு ராஜா சுப்ரமணி கூறியதாவது: முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றதில் பெருமை அளிக்கிறது. ஆயுதப்படைகள் மீது வைத்த நம்பிக்கைக்காக நாட்டிற்கு கடமைப்பட்டுள்ளோம். ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தேசம் என்ற கருத்தில் ஒருங்கிணைந்து, இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

Latest Tamil News
தற்சார்பு இந்தியா நமது நாட்டின் பாதுகாப்பின் மையத் தூணாக திகழ்கிறது. நமது ஆயுதப்படைகளில் உற்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சேர்ப்பதையும், பயன்படுத்துவதையும் விரைவுபடுத்துவோம். ராணுவம், தொழில்துறை, கல்வித்துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையேயான பரந்து ஒத்துழைப்பே, நவீனமாயமாக்கலுக்கான முக்கிய உந்துசக்தியாக இருக்கும். நமது நாட்டு நலன்களை பாதுகாப்பதில், ஆயுதப்படைகள் தொழில்முறைத்திறன் மற்றும் செயல்பாட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் திறனையும் வெளிப்படுத்தி வருகின்றன. நமது நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.

Latest Tamil News
மறைந்த தளபதி பிபின் ராவத் மற்றும் அனில் சவுஹானுக்கு ஆகியோரின் முன்மாதிரியான தலைமைக்கும், அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவ வீரர்கள், கடற்படையினர் மற்றும் விமானப்படை வீரர்களின் தைரியத்தையும் தொழில்முறைத் திறனையும் அங்கீகரிக்கிறோம். அவர்களின் பயிற்சியும் நலனுமே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். தேசத்திற்காக தாங்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து நமக்கு உத்வேகம் அளித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது முன்னாள் வீரர்களின் நலனுக்கு உறுதிப்பூண்டுள்ளோம். நமது முப்படைகளும் அர்ப்பணிப்பு, தைரியம், மரியாதை மற்றும்தொழில்முறைத் திறனுடன் தேசத்திற்குத் தொடர்ந்து சேவை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement