பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர்: தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்து, தேர்தல் அறிக்கையில் கூறியபடி திட்டத்தை செயல்படுத்தக் கோரி, விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர், தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரி சாலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு உள்ளிட்ட குறு, சிறு விவசாயிகளுக்கு முழு விவசாய கடனும், அதற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, 50 சதவீத கடனும் தள்ளுபடி செய்யப்படும் என, அறிவித்தார்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும், சொற்ப அளவில் தான் பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளார். இந்த திட்டத்தை ரத்து செய்து, தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், வரும் 30ம் தேதி சென்னையில், தமிழகம் முழுதும் இருந்து, விவசாயிகள் 10,000 டிராக்டர்களில் வந்து போரா ட்டம் நடத்துவோம் .
இவ்வாறு அவர்கள் பேசினர்.
பின், அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், விவசாயிகள் கோஷமிட்டனர்.
பின், முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும், கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். அவர்கள், மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துச் சென்றனர்.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி