மணிமுக்தா ஆற்றில் சீரமைப்பு பணி துவக்கம்:தினமலர் செய்தி எதிரொலி
கள்ளக்குறிச்சி: தினமலர் செய்தி எதிரொலியால் மணிமுக்தா ஆற்றின் நடுவே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமான கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பருவ மழை காலங்களில் அணை நிரம்பியதும், ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கும்.
அத்தருணங்களில் கோமுகி, மணிமுக்தா ஆற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடும். ஒவ்வொரு தடுப்பணையில் இருந்தும் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏரிகள் நிரம்புகின்றன. தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து கிணற்று நீர் பாசனத்திற்கும் வழிவகைகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஆறுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் ஆறுகளின் நடுவே அதிகளவிலான மரங்கள், செடி கொடிகள் பெரிய அளவில் வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள், கட்டிட இடிபாடுகள் போன்றவற்றினால் ஆற்றின் அகலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வரும் காலங்களில் ஆறுகள் ஓடையாகவும், கால்வாயாகவும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆற்றில் பெரும்பாலான இடங்களில் மணல் மேடுகள் இன்று மரம், செடிகள் மட்டுமே வளர்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகளும் பலவீனமாகவும் இருக்கிறது.
இது போன்ற காரணங்களால் ஆற்று பகுதிகளை ஓட்டியுள்ள விவசாய நில பரப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து விடுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இரு ஆறுகளிலும் எவ்வித பாராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனையொட்டி ஆற்றின் உட்புறத்தில் மரம், செடிகளை அகற்றி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மணிமுக்தா ஆற்றில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆற்றின் நடுவே உள்ள மரம், செடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை