காளியம்மன்கோவிலில் கரக வீதியுலா உற்சவம்

சேத்தியாத்தோப்பு: காளியம்மன் கோவில் திருவிழா கரக வீதியுலா உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவில் உள்ள மகா காளியம்மன்கோவிலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.

தொடர்ந்து மூலவர் மகா காளியம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் திரவியப்பொடி உள்ளிட்ட, 16 வகை சிறப்பு அபிேஷகம் நடந்தது.

நேற்று முன்தினம்  மகா காளியம்மன் கரகம் சோடிக்கப்பட்டு நள்ளிரவு 1:00 மணியளவில், வீதியுலா நடந்தது.

தொடர்ந்து கோவிலிலிருந்து  நேற்று காலை 9:00 மணியளவில் மல்லிகை பூங்கரகம் சோடிக்கப்பட்டு, சாமி வீதியுலா நடந்தது.



 :

Advertisement