போடியில் சாரல் மழை

போடி, மே 2 -

போடி பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து இல்லாமல் போனது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நிலங்களும் வறண்டு காணப்பட்டன. நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி மற்றும் தோட்டப்பயிர்கள் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 4 : 00 மணிக்கு குரங்கணி, கொட்டகுடி, போடி பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement