கோயில் உற்ஸவ விழா
அலங்காநல்லுார்: அ.கோவில்பட்டியில் முத்தாலம்மன், கோட்டை கருப்புச்சாமி கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.
முதல் நாள் ஒன்பது தெய்வங்களுக்கும் கனி மாற்றுதல், இடையபட்டி சென்று கணக்கபிள்ளை மற்றும் பூஜாரி வீட்டில் இருந்து முத்தாலம்மன், அய்யனார், கருப்புச்சாமி மற்றும் குதிரை அழைத்து வருதல், சுவாமி கண் திறந்து சக்தி கிடா வெட்டி சாமி கோயிலுக்கு செல்லுதல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
இரண்டாம் நாள் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். பெட்டி பூசாரி அரண்மனை பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், கிராம ஒன்பது தெய்வங்களின் கோயிலில் பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டி வழிபாடு செய்தனர். அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.
மூன்றாம் நாள் அய்யனார் சாமி, கன்னிமார் சாமிகள், கருப்புசாமிகள் மற்றும் குதிரை கோயில் சென்றடைந்தன. பக்தர்களுக்கு பல்லயம் பிரித்து வழங்கப்பட்டது.