பயன்பாடின்றி துருப்பிடித்து வீணாகி வரும் குப்பைத்தொட்டி

முதுகுளத்துார்:முதுகுளத்துார் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உள்ள குப்பைத்தொட்டிகள் துருப்பிடித்து பயன்பாடின்றி உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

முதுகுளத்துார் ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் கண்ட இடங்களில் குப்பை கொட்டாமல் தடுப்பதற்காக இரும்பு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. இந்த குப்பைத்தொட்டிகள் பலஇடங்களில் சேதமடைந்து பயன்பாடியின்றி விணாகியது. இதன்காரணமாக மக்கள் வேறுவழியின்றி குப்பையை ரோட்டோரத்தில் கொட்டி வருகின்றனர். விளங்குளத்துார் கிராமத்தில் உள்ள குப்பைத்தொட்டி துருப்பிடித்து சேதமடைந்துள்ளதால் குப்பை ஆங்காங்கே பரவி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement