சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ஜெயந்தி விழா
ராமேஸ்வரம் ஜூன் 2–: -
காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் சந்திரசேகரேந்திரர் சரஸ்வதி சுவாமியின் 133வது ஜெயந்தி விழாயொட்டி ராமேஸ்வரத்தில் தேர் ஊர்வலம் நடந்தது.
காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி 133வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நேற்று முன்தினம் அவரது திருவுருவ சிலைக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று மாலை மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்திரசேகர் சரஸ்வதி சுவாமி சிலை வைத்து, கோயில் நான்கு ரதவீதியில் பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். அப்போது ரத வீதியில் கூடி இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் அனுஷம் கமிட்டியினர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement