சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில், கடந்த மாத கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ளவை குறித்து கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, வரும் காலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பிரச்னை ஏற்படும் சூழல் இருந்தால் அதை உடனடியாக தெரிவிப்பதுடன், அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் எஸ்.பி., ஷானாஸ், டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் காவல்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்க கூட்டம்
-
பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
-
பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
-
குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
-
விழுப்புரம் அருகே நெல் குவியலுடன் விவசாயிகள் தவிப்பு: கொள்முதல் நிலையம் முடங்கியதால் வேதனை
-
தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement