உயர்மட்ட பாலம் தேவை: கிராம மக்கள் கோரிக்கை
உடுமலை: குடிமங்கலம் ஒன்றியம், நஞ்சேகவுண்டன்புதுார் கிராமத்தில் இருந்து பொம்மநாயக்கன்பட்டி வழியாக வீதம்பட்டி செல்லும் கிராம இணைப்பு ரோட்டை அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோட்டில், உப்பாறு மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது.மழைக்காலத்தில், ஓடையில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இணைப்பு ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
இதனால், நஞ்சேகவுண்டன்புதுார் உள்ளிட்ட பல கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓடையின் மீது, உயர் மட்ட பாலம் கட்ட குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement