சுகாதாரத்துறை ஆய்வுக்கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.,க்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமார், கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களும், மருத்துவச் செலவை திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை