கோடையிலும் ஏழு குளங்களில் திருப்தியான நீர் இருப்பு

உடுமலை: திருமூர்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வாயிலாக, ஏழு குளங்களுக்கும் நீர் வழங்கப்படுவதால், கோடையிலும் திருப்தியான நீர் இருப்பு உள்ளது.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனம், ஏழு குளங்களின் வாயிலாக, 2,700 ஏக்கர் வரை பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து, ஏழு குளங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு வருவதால்,  குளங்களின் நீர்மட்டம் கோடை காலத்திலும் திருப்தியாக உள்ளது.

ஏழு குளத்தில், பெரிய குளம், 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். நேற்றைய நிலவரப்படி, இக்குளத்தில், 9.60 அடி நீர்மட்டமும், 9.20 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் இருந்தது.

அதே போல், செங்குளம், 74.84 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர்மட்ட உயரமும், 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். இதில், 5.80 அடி நீர்மட்டமும், 6.10 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

ஒட்டுக்குளம், 90 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். இதில், 8.20 அடி நீர்மட்டமும், 9.20 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

செட்டிகுளம், 67.49 ஏக்கர் பரப்பளவில், 7.5 நீர்மட்ட உயரம், 7.93 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இங்கு, 5.80 அடி நீர்மட்டமும், 5.26 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

தினைக்குளம், 51.19 ஏக்கர் பரப்பளவில், 9.25 அடி நீர்மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி, இக்குளத்தில், 7.80 அடி உயரமும், 6.42 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

கரிசல் குளம், 31.22 ஏக்கர் பரப்பளவு, 7.65 அடி நீர்மட்டம், 2.92 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டது. இக்குளத்தில், 7.40 அடி நீர்மட்டமும், 2.82 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

அம்மாபட்டி குளம், 31.22 ஏக்கர் பரப்பளவில், 4.50 அடி நீர்மட்டம், 1.76 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையதாகும். இக்குளத்தில், 3.60 அடி நீர்மட்டமும், 1.62 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் இருந்தது.

வலையபாளையம் குளம், 52.80 ஏக்கர் பரப்பளவில், 110.33 அடி நீர்மட்டமும், நீர் கொள்ளளவு, 7.63 மில்லியன் கனஅடி உடையதாகும். இக்குளத்தில், 9.50 அடி நீர்மட்டமும், 7.16 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து குளங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருவதால், 75 சதவீதத்திற்கும் மேல், 5 குளங்களிலும், 50 சதவீதத்திற்கும் மேல், 2 குளங்களிலும் நீர் இருப்பு உள்ளது.

Advertisement