'கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் பழமையை சிதைப்பதாக குற்றச்சாட்டு'
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பெருமாநல்லுார் பகுதி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. நுாற்றாண்டுக்கும் மேற்பட்ட கோவிலையே, இடிக்காமல் புனரமைக்கவேண்டும் என, கோர்ட் அறிவுறுத்தல்கள் உள்ளன.
கோவிலில், மன்னர் கால சிற்பங்கள் உள்ள மதில் சுவரை, இடித்து, விரிவாக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. பழங்கால கோவிலை இடித்துவிட்டு, அதே கற்களை கொண்டு, அப்படியே கோவில் கட்டுவதாக கூறுகின்றனர். இதனால், கோவிலின் வரலாற்று பெருமை சிதைந்துவிடும். இதற்கு, தொல்லியல் துறை எப்படி அனுமதி அளித்தது என்ற சந்தேகம் எழுகிறது.
புதிதாக எழுப்பப்பட உள்ள ராஜகோபுரத்துக்கு, மூன்று அடி உயரத்துக்கு கான்கிரீட் பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவில், மறைக்கப்படும் நிலை உள்ளது. ராஜகோபுரத்தை உயர்த்தினால், கோவில் மதில் சுவர், சன்னதி அனைத்தையும் உயர்த்தவேண்டிவரும். மூலஸ்தான சன்னதி, தரைமட்டத்திலிருந்து கீழே அமைந்துவிடும்.
கோவிலில் பெருமையான குண்டம் திருவிழாவை சிதைக்கும்வகையில், மண் பூச்சுக்கு பதிலாக, செங்கல் வைத்து குண்டம் அமைக்கின்றனர். நடப்பாண்டு குண்டம் இறங்கிய பக்தர்கள், அதிக வெப்பம் காரணமாக, பூக்குழியில் இறங்காமல், பக்கவாட்டிலேயே சென்றனர்.
கலெக்டர் ஆய்வு செய்து, கொண்டத்துக்காளியம்மன் கோவிலை, பழமை மாறாமல் சீரமைக்கவும், ராஜகோபுரத்தை மற்ற கோவில்கள் போன்று உயரம் குறைத்து அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பூக்குழியில், செங்கல் சுவரை அகற்றிவிட்டு, பாரம்பரிய முறைப்படி, மண் குழைத்து பூசி, பக்தர்கள் அச்சமின்றி குண்டம் இறங்க ஆவன செய்யவேண்டும்.
மேலும்
-
125 குவாரிகளில் 'ரெய்டு' கனிமவளத்துறை நடவடிக்கை
-
மருத்துவ பல்கலை துணைவேந்தராக புஷ்கலா நியமனம்
-
கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வழக்கு
-
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தி.மு.க., வழக்கு முடித்து வைப்பு
-
முதல்வர் விஜய் 'இரவல் சக்தி' அ.தி.மு.க., -- எம்.பி., பாய்ச்சல்
-
கிடப்பில் பஞ்சமி நில சுற்றறிக்கை எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்