மேலுாரில் நுாதன மோசடி: டி.எஸ்.பி., எச்சரிக்கை
மேலுார்: மேலுார் டி.எஸ்.பி., சிவகுமார் அறிவித்துள்ளதாவது:
மேலுார் பகுதியில் அலைபேசி வாட்ஸ் அப்பில் தனிநபர்கள் (விஜி) ஆப் உருவாக்கி கவர்ச்சிகர விளம்பரங்களை பரப்புகின்றனர்.
இவ்வகை வாட்ஸ் அப்பில் மக்களை உறுப்பினராக்க ஒவ்வொரு கிராமத்திலும் தனி ஏஜென்ட் உள்ளனர். தங்களை தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொள்ளும் ஏஜென்ட் பணம் கொடுத்தவருக்கு அலைபேசியில் ஆப் ஏற்றி கொடுக்கிறார். அவர் மற்றவரிடம் ரூ. 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு உறுப்பினராக்குகிறார். இவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு 45 நாட்களில் பணம் இரண்டு மடங்காக கிடைக்கும் என்றும், ஆன்லைன் கேம் விளையாடு; அதிக பணம் சம்பாதி என பலவித விளம்பரங்களை பரப்புகின்றனர்.
விளம்பரத்தை நம்பி மேலுார் பகுதி மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி ரூ.10 கோடிக்கு மேல் இழந்துள்ளனர். ஆனால் ஏமாந்த பலரும் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. இவ்வாறு நுாதன மோசடி செய்வோரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என டி.எஸ்.பி., எச்சரித்துள்ளார்.
மேலும்
-
125 குவாரிகளில் 'ரெய்டு' கனிமவளத்துறை நடவடிக்கை
-
மருத்துவ பல்கலை துணைவேந்தராக புஷ்கலா நியமனம்
-
கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வழக்கு
-
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தி.மு.க., வழக்கு முடித்து வைப்பு
-
முதல்வர் விஜய் 'இரவல் சக்தி' அ.தி.மு.க., -- எம்.பி., பாய்ச்சல்
-
கிடப்பில் பஞ்சமி நில சுற்றறிக்கை எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்