13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்பதில் அரசு கவனம்; அமைச்சர் ரமேஷ் உறுதி
சென்னை: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்க அரசு உறுதிபூண்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியதாவது; பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இனாம் நிலங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம், குடியிருப்பு மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவில் நிலங்களை அடையாளம் காணும் பணி பல்லாண்டுகளுக்கு முன் தொடங்கியது.
எனினும், கோவில் இனாம் நிலங்கள் தொடர்பாக முழு கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலங்கள் அனைத்தும் கோவில்களுக்கு முழு உரிமையானவை.
மாவட்ட வாரியாக ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இனாம் நிலங்கள் குறித்தும், அதனை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் நிலை குறித்து அறிக்கை தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
அது மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை (இனாம் நிலங்கள் வேறு வகை) மீட்பது குறித்தும் நடவடிக்கை அறிக்கை கேட்டுள்ளேன்.
கோவில்களுக்கு வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கவும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 1500 கோடி ரூபாய் வாடகை கோவில்களுக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
@block_B@
அதென்ன இனாம் நிலம்!
இனாம் நிலம் என்பவை, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக, நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களால் கோவில்களை பராமரிக்கவும், அவற்றின் சேவைகளை தொடர்ந்து செய்வதற்கும் தானமாக வழங்கப்பட்டவைblock_B
பெரும் கோவில்களை சுற்றி இருக்கும் இன்றைய பெருநில மதிப்பு உள்ள வணிக இடங்கள், கோவில் ஊழியத்துக்காக என்று அந்த 3% தரப்புக்கு தரப்பட்ட இடங்கள் அன்றைய அக்கிரகாரங்களாக இருந்தவை. ஐந்தாம் பத்தும் என்று வாடகை கொடுத்து விட்டு அந்த இடத்தை உள்வாடகை விட்டு பல லட்சம் ரூபாய் வாடகை வசூலிக்கும் so called அர்ச்சகர் குடும்பங்கள் ஏராளம். அமைச்சருக்கு அந்த பல லட்சம் ஏக்கரில் ஒரிரு லட்சம் ஏக்கர் இடங்கள் அக்கிகாரத்தில் இருக்கும் இடம் தான் என்று சீக்கிரமே தெரியவரும்.
கோயில்கள் எல்லாம் அரசுவசம் இருக்கும்போது 13 லக்ஷம் ஏக்கர் பறிபோனது எப்படி ?வெளியே பயிரை மேய்ந்த கதைதான் .
ஆயிரமாண்டுகளாக மேஞ்சிண்டு இருந்தாங்களாம் ஓய். தெரியாதா?
கோயில் வளங்களையெல்லாம் கொள்ளையடிப்பதற்காகவே சட்டங்கள் ஏதுமின்றி திராவிட முன்னேற்ற கழக அரசு கோயில்களை அரசு வசம் கொண்டுவந்தது .தமிழக மக்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் இப்போதும் புரிந்துகொள்ளும் திறன் இல்லை .கோயில் நிலங்களையெல்லாம் வீட்டு மனைகளாக்கி பனம்பண்ணிவிட்டார்கள் .முதலில் அரசிடமிருந்து கோயில்களை நீதிமன்றம் மூலம் விடுவிக்க முயற்சிக்கவேண்டும் .மக்கள் சட்டத்தை சரியாக படித்து அறியவேண்டும் .கோயில்கள் எல்லாம் அந்தந்த ஊர்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களால் நிர்வாகம் செய்திடவேண்டும் .அதுதான் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த சட்டம் .அதுவே 1969 வரை இருந்தது .1970 இலுருந்துதான் அரசு வசம் உள்ளது .சட்டங்களேதுமில்லை.அறநிலைய சட்டம் 1959 கோயில்களுக்கானது இல்லை .படித்தறியுங்கள் .
ஆலய நிலங்களை அனுபவிப்பவர்கள்களுக்கே பட்டா போட்டுக் கொடுத்துவிட வேண்டும் என உங்க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் கேட்கின்றனர். மெஜாரிட்டி வேணுமா வேண்டாமா?.
அறநிலையத்துறை ஒப்புக் கொண்ட விஷயம் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட ஆலய நிலங்களை காணோம். 2. சில நூறு ஆலயங்கள் இருந்த இடங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 3. ஆலய விக்கிரகங்கள் நகைகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இதற்கெல்லாம் தீர்வு என்ன? ஆலயப் பணியாளர்கள் குடியிருக்கும் இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு சந்தை மதிப்பில் குத்தகை நிர்ணயிக்கப்பட்டு முன்தேதியிட்டு வசூலிக்க வேண்டும். அரசுப் பயன்பாட்டில் உள்ள ஆலய நிலங்களுக்கு மாதாமாதம் வாடகை செலுத்தத் தவறினால் அமைச்சர் பதவி விலக வேண்டும்.
திராவிட காட்சிகள் தமிழகத்தை ஆண்டபோது கோவில் இனாம் நிலங்களை அபகரித்து ஆட்டை போட்டது அப்பப்பா அளவிலடங்காது இதை கிளறினால் காலம் முழுதும் இதே வேலையாகத்தான் இருக்கும் பெரும்பாலும் கோவில் நிலங்களை முதலில் அன்பவிப்பவர்கள் அரசியல் வாதிகள்தான் அதிலும் இந்த திராவிட இரு கட்சிகளும் சமமாகவே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு கோவில் நிலங்களை அனுபவித்து வருகிறார்கள் இவைகளை மீட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் தாங்களே அனுபவிக்கும் அரசியல்வாதிகளிடம் பல லட்சக்கணக்கான நிலங்களை இப்போது உள்ள அரசு மீட்க வேண்டும் அதற்கு காலதாமதம் ஆனாலும் செய்யும் பரவாயில்லை எடுத்தக பணியை முழுதும் கண்ணகியமாக செய்து நிலங்களை மீட்டதே போதும்
தமிழன், ஆண்டி என்ற பெயர்களில் அரபி அடிமைகள்
கோவில் கடவுள் என்பதெல்லாம் சுத்த பிதற்றல். கோவிலுக்கும் போகும் கூட்டத்தை விட சினிமாவுக்கு போகும் கூட்டம்தான் அதிகம் . இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த காலி கூட்டத்தால்தான். கடவுளால் அல்ல
கடவுளை இந்துமதத்தை நம்புகிறவன் ....
ஒரு அரசு மக்கள் நலனில் மட்டுமே முக்கியம் செலுத்தவேண்டும். மூட நம்பிக்கைகளை கைவிடவேண்டும். ஏற்கனவே மக்கள் பணிகளுக்காக உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, அதை பிடுங்கி தங்களுக்கு வேண்டிய குண்டர்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி இது .
இது வக்ஃபு நிலங்களுக்கும் பொருந்தும் என்கிறீர்களா?. மாட்டீர்கள்.மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை