உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள்; நாளை பதவியேற்கும் மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

4

புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு இன்று புதிய நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை பதவியேற்கின்றனர். பதவியேற்கும் நீதிபதிகளில் ஒருவரான மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்ட அறிவிப்புகளின்படி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறி இருந்த வெங்கிட சுப்ரமணி மோகனா, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நகு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் நாளை காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்க இருக்கின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.




@block_Y@

முதல்வர் விஜய் வாழ்த்து



அறிக்கை; உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உச்சநீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப்பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.block_Y

Advertisement