மாரியூரில் குரு பெயர்ச்சி விழா
சாயல்குடி: குரு பகவான் மிதுான ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடக ராசி குருவின் உச்ச வீடாகும். எனவே இந்த பெயர்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
இதன்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடகத்தில் சஞ்சரிப்பதால் இந்த மகா குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த குரு பெயர்ச்சி 2026 ஜூன் 2 முதல் 2027 ஜூன் 26 வரை 12 ராசிகளுக்கும் பயன்பாடாக இருக்கும். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிற வல்லியம்மன் கோயிலில் காலை 7:00 மணிக்கு குரு பெயர்ச்சி பூஜைகள் நடந்தது.
மூலவர் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்புறம் நடந்த யாக வேள்வியில் புனித குடம் அமைக்கப்பட்டு சங்கல்ப பூஜைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள் பூஜைகளை மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
புனிதக்குடம் ஏந்தியவாறு உள்பிரகார புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.