தமிழகத்தில் மின்வெட்டை தவிர்க்க பா.ம.க.,செயல் தலைவர் கோரிக்கை
திண்டிவனம்: தமிழ்நாட்டில் மின்வெட்டை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ம.க., செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில், மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தமிழக அரசு மற்றும் மின்துறை நிர்வாகம் கோடைகால மின்தேவையை முன்கூட்டியே கணித்து, மின்வெட்டு ஏற்படாத வகையில் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், புதிய அரசு, மின்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்