ஐ.நா., பொது சபை தலைவராக வங்கதேச அமைச்சர் தேர்வு
நியூயார்க்: ஐ.நா., பொது சபையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா., பொது சபையின் 81-வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஐ.நா.,வின் சுழற்சி முறை விதிகளின்படி, இந்த முறை தலைவர் பதவி ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் மற்றும் சைப்ரஸ் நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கவுரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
மொத்தம், 193 நாடுகளைக் கொண்ட ஐ.நா., பொது சபையில் நடைபெற்ற ரகசிய ஓட்டெடுப்பில், கலீலுர் ரஹ்மான், 99 ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்
Advertisement
Advertisement