மஹா.,வில் முடிந்தது தமிழகத்தில் முடியாதா?
பல்லடம்: 'மஹாராஷ்டிரா அரசால் செயல்படுத்த முடிந்த பயிர் கடன் தள்ளுபடியை, தமிழக அரசால் நிறைவேற்ற முடியாதது ஏன்?' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பல்லடத்தில், அதன் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:
மஹாராஷ்டிரா அரசு, விவசாயிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை, பயிர் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, அரசு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த விவசாயிகளுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, தேர்தல் வாக்குறுதிப்படி, பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மஹா., அரசால், பயிர் கடன் தள்ளுபடியை செயல்படுத்த முடியும் போது, தமிழக அரசால் ஏன் முடியாது? உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்ற நிலை தொடரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்